வணிகம்
பதஞ்சலி பெயரில் மோசடி.. 4 லட்சம் ரூபாய் இழந்த வணிகர்..!

மகாராஷ்டிராவில் பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் விநியோகஸ்த்தர் உரிமையைப் பெற முயன்று 4 லட்சம் ரூபாயினை ஏமார்ந்துள்ளார்.
பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் 4 லட்சம் ரூபாயினைச் செலுத்திய பிறகும் அவருக்குப் பொருட்கள் ஏதும் விநியோகம் செய்யப்படாததை அடுத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா காவல் துறையினர் இது குறித்துப் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



















