பிற விளையாட்டுகள்
இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற லவ்லினா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வாங்கிய வெள்ளிப்பதக்கம் மட்டுமே இந்தியாவின் பதக்க பட்டியலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் தொடர்ச்சியாக ஒரு சில வெற்றிகளை பெற்று வருவதை அடுத்து மேலும் சில பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை தைபே என்பவரை அவர் வீழ்த்தியதை அடுத்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் லவ்லினா தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைக்கும் என்பதும் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதியிலும் வெற்றி பெற்றால் தங்கம், தோல்வி அடைந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்தியாவில் லவ்லினாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












