சினிமா
லால் சலாம் படத்தின் கதை இதுதானா? மொய்தீன் பாயாக மிரட்டப் போகிறாரா சூப்பர்ஸ்டார்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் கதை பற்றியும், அதில் சூப்பர்ஸ்டார் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்தும் பிரபல பத்திரிகையாளர் ரிவீல் செய்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ந் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் சொதப்பிய நிலையில், .எப்படியாவது பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து வெறித்தனமாக நடித்து வருகிறார்.

#image_title
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மினி டீசர் சமீபத்தில் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் வெற்றியடையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் கதை குறித்து பத்திரிகை செய்யாறு பாலு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாட்டின் பின் தங்கிய குடும்பத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் டீமுக்கு தேர்வு ஆவார்கள் எனவும், அவர்கள் மும்பைக்கு கிரிக்கெட்டுக்காக செல்லும்போது அவர்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதில் ரஜினியின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதுதான் கதை என்று எனக் கூறியுள்ளார்.
முன்னதாக லால் சலாம் படமானது பாலிவுட்டில் வெளியான Kai po che படத்தின் ரீமேக் எனக் கூறப்பட்டது. அந்தப் படத்திலும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மூன்று பேர் சந்திக்கும் பிரச்சனைகள் பேசப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தின் கதையும் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை எப்படி எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.