தமிழ்நாடு
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
Published
4 years agoon
By
caston
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்கள், அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனையடுத்து சென்னையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்று மரியாதை செலுத்தினர். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நீண்டகால தனிப்பட்ட உதவியாளராக இருந்த பூங்குன்றன் தற்போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா உன்னுடைய சிம்மக்குரலில் பூங்குன்றன் என என்னை அழைக்கமாட்டாய என அவர் கூறுவது மிகவும் உருக்கமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பூங்குன்றனின் உருக்கமான வீடியோ
நன்றி: தந்தி தொலைக்காட்சி
You may like
-
ரூ.29,970 ஆயிரம் ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
-
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
-
முடிந்தது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: அறிக்கை சமர்ப்பிப்பது எப்போது?
-
தமிழக கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு!