சினிமா
ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜூன்?

நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அல்லு அர்ஜூன் தவிர்த்து இருக்கிறார்.

Arjun Shah Rukh Khan
அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர். இந்த வருடம் ஜூன் மாதத்தில் இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
புனே, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் வலுவான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே, இந்தப் படத்தில் நடிகர் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடித்து இருக்கிறார் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் கேமியோ கதாபாத்திரத்திற்காக வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

jawan
‘ஜவான்’ படத்தில் சிறிது நேரமே வரக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கதைக்கு அது திருப்புமுனைய ஏற்படுத்தும் என்பதால் அதில் அல்லு அர்ஜூனை நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் அவர் ‘புஷ்பா2’ படத்திற்கான பணிகளில் பிஸியாக இருந்ததால் இந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் தவிர்த்திருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ’ஜவான்’ படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க விருப்பம் இருந்தாலும் ‘புஷ்பா2’ பட வேலைகள் காரணமாக அதைத் தவிர்க்க நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.