கிரிக்கெட்
INDvAUS – பந்தை பார்க்காமலேயே சிக்ஸ் அடித்த வாஷிங்டன் சுந்தர்; அசத்தல் அரை சதத்தால் ஆஸி.,யை நோகடித்தார்!

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வாஷிங்டன் சுந்தர், அசத்தல் அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாது என்று அஞ்சப்பட்டது. ஆனால் சுந்தரின் அரை சதம் மூலம் இந்தியா மதிக்கத்தக்க ஸ்கோரான336ஐ அடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இன்றைய ஆட்டத்தை 2 விக்கெட்டுகள் இழந்து 62 ரன்களுடன் ஆரம்பித்தது. 3வது நாள் ஆட்டத்தை செத்தேஷ்வர் புஜாராவும், அஜிங்கியே ரஹானேவும் மீண்டும் ஆரம்பித்தனர். இருவரும் முறையே 25 மற்றும் 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த மயான்க் அகர்வாலும் 38 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அதிரடியாக விளையாடினாலும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களத்துக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். அவருடன் ஷ்ராதுல் தாக்கூரும் ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் தாக்கூர் மளமளவென ரன் குவித்து, அரைசதம் எட்டினார். அவர் 67 ரன்களுக்கு அவுட்டாக சுந்தர், தொடர்ந்து களத்தில் இருந்தார். அவர் கடைசியாக 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இந்திய இன்னிங்ஸும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 336 ரன்களோடு தனது முதல் இன்னிங்ஸை இந்தியா முடித்துக் கொண்டது.
வெறும் 33 ரன்கள் லீடிங் உடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அந்த அணி ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் விளையாடி வருகிறது.
இன்னும் இரண்டே நாட்கள் மட்டுமே ஆட்டம் பாக்கியிருப்பதால், இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய இன்னிங்ஸில், சுந்தர், பந்தைப் பார்க்கமலேயே அடித்த ஒரு சிக்ஸர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல இந்திய அணியின் பேட்டிங்கும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக, எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத இந்தியாவின் மனப்பான்மைக்கு அனைவரும் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
சுந்தரின் ‘பலே’ சிக்ஸ் வீடியோ இதோ:
That’s spicy! A no-look six from Sundar 6️⃣
Live #AUSvIND: https://t.co/IzttOVtrUu pic.twitter.com/6JAdnEICnb
— cricket.com.au (@cricketcomau) January 17, 2021
இந்தியாவின்அசத்தல் பேட்டிங் ஹைலைட்ஸ்: