Connect with us

விமர்சனம்

இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம்!

Published

on

இமைக்கா நொடிகள், திரை விமர்சனம், நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் விமர்சனம், Imaikka Nodigal, Movie, Review, Nayanthara, Anuragk Kashyap, Adharva, imaikka nodigal review, imaikkaa nodigal review

நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அதர்வா நடிப்பில் டிமாண்ட்டி காலனி திரைப்படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் தான் இமைக்கா நெடிகள்.

முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான பேய் படத்தினை அளித்த அஜய் இந்த முறை க்ரைம் திரில்லர் படத்தினை அளித்துள்ளார். சரி படத்தினைப் பற்றி இனி பார்ப்போம்.

படம் துவங்கிய உடன் ஒரு பெண் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இது குறித்த தகவல் சிபிஐ அதிகாரியான நயன்தாராவிற்குத் தெரிய வருகிறது. யார் அந்தக் கடத்தல் காரர் என்று விசாரணை செய்யும் நிலையில் பணத்தினைப் பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணை அனுராக் கொலை செய்துவிடுகிறார்.

அதோடு இல்லாமல் தொடர்ந்து இது போன்ற கடத்தல், கொலை சம்பவங்கள் நடைபெற நயன்தாராவின் தம்பியான அதார்வா மற்றும் அவரது கதலியான ராஷி இருவரும் சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள். மீண்டும் இருவரும் சந்திக்கும் நேரத்தில் அதர்வாவின் காதலியும் கடத்தப்படுகிறார். அதர்வா தான் கடத்தியுள்ளார் எனக் கைது செய்யப்பட நயன்தாராவின் வேலைக்குப் பிரச்சனை வருகிறது.

பின்னர் அந்தச் சிக்கலான சூழலில் இருந்து நயன்தாரா தனது தம்பியைக் காப்பாற்றினாரா இல்லையா, அனுராக் யார், ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார், ராஷி கன்னாவை அதர்வா காப்பாற்றினாரா என்பது மீதக் கதை.

அதற்கு இடையில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவின் காதல் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தது எனலாம். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக அளித்துள்ளார்.

நயன்தாரா சிபிஐ அதிகாரியாக, அக்காவாக, காதலியாக எனத் தனது கதாப்பாத்திரத்தினைச் சிறப்பாகச் செய்து தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார். அனுராக் காஷ்யப் இந்தியில் மிகப் பெரிய இயக்குநராக உள்ள நிலையில் இனி வில்லனாகவும் ஒரு ரவுண்ட் வருவார்.

அதர்வா இளமை துள்ளலுடன் நடித்துத் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். சில லாஜிக் மீறல்கள், அதர்வா மற்றும் ராஷி கன்னா இடையிலான காதல் காட்சிகள் சிறிது இழுவை தான். இருப்பினும் டிமாண்டி காலனி போன்றே இந்தப் படம் நிதானமான வேகத்தில் சென்றாலும் ரசிகர்களைக் கவரும் எனலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்4 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்8 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்8 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.