தமிழ்நாடு
15 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னையில் மழை பெய்யுமா?

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை முதல் லேசான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
குறிப்பாக சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

















