கிரிக்கெட்
சென்னை அணிக்கு மேலும் ஒரு தோல்வி: கடைசி இடத்தை பிடிக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணி விரைவில் கடைசி இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இதனை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இளம் வீரர்களான ருத்ராஜ் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு ரன்களை அடித்தனர்.
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.1 ஓவரில் இலக்கை எட்டியது. இதனையடுத்து சென்னை அணிக்கு மேலும் ஒரு தோல்வி ஏற்பட்டு உள்ளது.
தற்போது சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இரண்டு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.