வணிகம்
ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்..!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இது வரை வசூல் ஆனதில், ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2021, ஜனவரி மாதம் 31-ம் தேதி மாலை 6 மணி வரையில் 1,19,847 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய இஎஸ்டி 21,923 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி வசூல் 29,014 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் 60,288 கோடி ரூபாய். செஸ் வரி 8,622 கோடி ரூபாய். செஸ் வரியில் 833 கோடி ரூபாய் இறக்குமதி வரியும் அடங்கும். 90 லட்சம் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

















