செய்திகள்
தீபாவளிக்கு இறைச்சி கடைகள் திறக்கப்படுமா? – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய தினத்திலும் இறைச்சி வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகள் அன்றைக்கு விற்பனை செய்யப்படும். ஏழை எளியவர்கள் வீட்டில் கூட அன்றைக்கு அவர்களுடைய சக்திக்கு ஏற்ப சிக்கன் மட்டன் என அசைவ உணவுகளை எடுத்து சமைத்து சாப்பிட்டு வருவது தமிழகத்தின் வழக்கமான ஒன்றாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எனவே, சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு இது மாமிச விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை என்றும் அறிவித்தது.

இதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள் மற்றும் இறைச்சி விரும்பிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியது. நான் என்ன சாப்பிட வேண்டும் என அரசு முடிவெடுக்க முடியாது என பலரும் பதிவிட்டனர். எனவே, அரசிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்தார்.
இந்நிலையில், மகாவீர் நிர்வனா என்ற ஜெயின் மத பண்டியையை ஒட்டி நவம்பர் 4ம் தேதி இறைச்சி கடைகள் மூடப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. அதே நேரம், ஜெயின் மத வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.









