தமிழ்நாடு
இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இறக்கம் காரணமாகவே சென்னையிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4452.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 22 ரூபாய் குறைந்து ரூபாய் 4430.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35616.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 176 குறைந்து ரூபாய் 35440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4794.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38352.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 22ம், ஒரு சவரன் ரூபாய் 176ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.70 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.80என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.








