Connect with us

வணிகம்

இந்த மூன்று துறைகளில் தான் அதிக வேலைநீக்கம்.. முன்னாள் மைக்ரோசாப்ட் HR தந்த தகவல்!

Published

on

2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் என்றால் அது ’வேலை நீக்கம்’ என்றுதான் கூற வேண்டும். தினம் தோறும் ஒரு பெரிய நிறுவனத்திடம் இருந்து வேலைநீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பது ஊழியர்கள் எந்த அளவு ஸ்திரத்தன்மை இன்றி வேலை பார்த்து வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் ஐந்து சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஹெச்ஆர் ஆக பணிபுரிந்த ஒருவர் எந்த துறையில் உள்ளவர்கள் வேலை நீக்க ஆபத்தில் அதிகம் உள்ளார்கள் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

முதலாவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் என்றும், வேலை நீக்கம் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் முதல் முதலாக கை வைக்கப்படுவது இந்த துறையினர் தான் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது என்பதாலும் அவர்கள் எந்த நேரமும் வேலை நீக்கம் செய்யப்படலாம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தான் வேலைகள் சேர்ந்து உள்ளார்கள் என்பதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்

அடுத்ததாக புதிய முயற்சிகளை நிறுவனத்தில் கொண்டு வர வேலைக்கு அமர்த்தபட்டவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனம் வளர்ச்சி பெறுவதற்கு புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதற்காக சிலரை பிரத்யேகமாக வேலைக்கு எடுப்பார்கள். ஆனால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் முதலில் கை வைக்கப்படுவது இந்த துறை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்வுகளை திட்டமிடும் ஊழியர்களும் வேலை நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை திட்டமிடுவது என்பது தற்போது ஆடம்பர நடவடிக்கையாக கணிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த துறையில் உள்ள ஊழியர்களும் வேலை நீக்க அபாயத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்

அப்படி என்றால் வேலை நீக்கும் அபாயம் இல்லாத துறை எது என்று கேள்வி எழுந்த நிலையில் லாபம் ஈட்டும் துறையில் உள்ள ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நிறுவனம் வேலையை விட்டு நீக்காது என்று தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் துறையில் இருப்பவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டு வேலை நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டால் நிறுவனத்தின் அடிப்படையை சீர்குலைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அடுத்ததாக HR என்று கூறப்படும் மனிதவளம் மேம்பாட்டு ஊழியர்களுக்கு எந்த காலத்திலும் வேலைக்கு ஆபத்து இல்லை என்றும் மிகவும் அரிதாகவே இந்த துறையில் உள்ளவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?