செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு ஜூலை 12ம் தேதி முதல் முன்பதிவு துவக்கம்!

தெற்கு ரயில்வே தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு ஜூலை 12ம் தேதி காலை 8மணி முதல் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

Southern railways upgrading and installing 254 Automatic Ticket Vending Machines
இந்தியாவில் வரும் முக்கிய பண்டிகை தினத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுமக்களுக்குப் பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு ஒரு சில மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கப்படுகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தற்போதே முன்பதிவு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து விட வாய்ப்புள்ளதால் கடைசி நேர நெருக்கடியையா தவிர்க்கப் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் உடனடியாக ஜூலை 12ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



















