சினிமா செய்திகள்
சமந்தாவை கொடுமைப்படுத்தினாரா நாக சைதன்யா?

நடிகை சமந்தாவை நாக சைதன்யா கொடுமைப்படுத்தினார் என பிரபல சினிமா விமர்சகர் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை சமந்தா. இவரும் நடிகர் நாகை சைதன்யாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்ற உறவிலிருந்து பிரிவதாகவும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தனர். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சமந்தா
இருவரும் பிரிந்ததற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இந்த செய்திகள் எதற்கும் சமந்தா தரப்போ நாங்க சைதன்யா தரப்போ விளக்கம் கொடுக்கவில்லை என்ற நிலையில், தற்போது சமந்தா கர்ப்பமாக இருந்தபோது கருக்கலைப்பு செய்யச் சொல்லி நாக சைதன்யா வற்புறுத்தியதாக பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து பதிவிட்டுள்ள ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் தெரிவித்திருப்பதாவது, ‘ நாக சைதன்யா மிக மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்திரவதை செய்தார். இதனாலேயே கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்தார். இந்த ஒரு விஷயமே அவர்களை விவாகரத்து வரை கொண்டு சென்றது’ என்று அந்த வீட்டில் தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது குறித்து சமந்தா தரப்போ நாக சைதன்யா தரப்போ பதில் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா தற்பொழுது மையோ சிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இதற்கான தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் பழையபடி படங்களிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.