Connect with us

தமிழ்நாடு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி? முழு தகவல்கள்!

Published

on

குன்னூர் அருகே இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாகவும், அதில் இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்ததாகவும் தெரிகிறது. இன்று 11:47 சூலூரில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் மதியம் 12 மணிக்கு விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு முன்னால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குன்னூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசின் எஸ்டேட் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் விழுந்த உடனேயே யாரும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் கூறியபோது விபத்து நடந்தபோது மிகப் பெரிய சத்தம் கேட்டதாகவும் ஒரு சிலர் அடர்ந்த காட்டுக்குள் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் பற்றி எரிந்து உள்ளதாகவும் தீயை அணைப்பதற்கு நீண்ட நேரமாகி உள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பயணம் செய்தவர்கள் யார் யார்? இதுவரை உயிர் இழந்தவர்கள் யார் யார்? என்பதை ராணுவ அதிகாரிகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டவர்கள் விரைந்து வர இருப்பதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்21 மணி நேரங்கள் ago

சம்பள உயர்வுக்கான 9 வலுவான காரணங்கள்

பர்சனல் ஃபினான்ஸ்21 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கில் பணம் இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்கள் (20/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 நாள் ago

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வார பலன்கள் (செப். 19 – 25)

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (19/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய (19 செப்டம்பர் 2024) ராசிபலன்கள்

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

ஜோதிடம்2 நாட்கள் ago

இந்த 4 ராசிக்காரர்கள் எளிதாக காதலிக்கிறார்கள்! உங்க ராசி என்ன?

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 நாட்கள் ago

கருவேப்பிலை பானம்: எடை குறைப்பு, ரத்த சர்க்கரையுடன் பல சுகாதார நன்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

யூபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு: உங்களுக்கு என்ன பயன்?

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (17/09/2024)!

கட்டுரைகள்6 நாட்கள் ago

பொறியாளர்களின் பங்களிப்பை கொண்டாடுவோம்: பொறியாளர் தினம்!

ஜோதிடம்6 நாட்கள் ago

புரட்டாசியில் குழந்தை பிறந்தால் பிரச்சனையா? உண்மையை தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

ஜியோவின் ஒரு ஆண்டு அன்லிமிட்டட் ரீசார்ஜ் திட்டம் இலவசம்! பெறுவது எப்படி?

ஜோதிடம்6 நாட்கள் ago

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 3 ராசிகளுக்கு வாழ்வில் பெரும் முன்னேற்றம்!

ஜோதிடம்6 நாட்கள் ago

சூரியனின் இடப்பெயர்ச்சி: சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் யார்?

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

கணவர் மனைவியின் கணக்கிற்கு பணத்தை மாற்றினால், வரி யார் செலுத்த வேண்டும்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய (2024, செப்டம்பர் 15) ராசிபலன்!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (18 செப்டம்பர் 2024)