உலகம்
Valentine’s day Special: இந்த சாக்லேட் டே அன்று சாக்லேட்டுடன் உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்…!

ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாரம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினம்/ வாரம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் அன்பிற்கும், அன்பின் சக்திக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.

சாக்லேட்
காதலர் வாரம் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் ரோஜா தினத்தில் தொடங்கி காதலர் தினத்துடன் முடிவடைகிறது.
- ரோஜா தினம் – பிப்ரவரி 7
- ப்ரொப்போஸ் தினம்- பிப்ரவரி 8
- சாக்லேட் தினம் – பிப்ரவரி 9
- டெடி தினம்- பிப்ரவரி 10
- ப்ராமிஸ் தினம்- பிப்ரவரி 11
- ஹக் தினம்- பிப்ரவரி 12
- கிஸ் தினம் – பிப்ரவரி 13
- காதலர் தினம் – பிப்ரவரி 14
பிப்ரவரி 9 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும், சாக்லேட் தினம் காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாகும். ஒருவருக்கு ஒருவர் சாக்லேட் பரிசளிப்பதன் மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்கவே சாக்லேட் அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சாக்லேட் கொடுப்பதால் வயது பாலினம் போன்ற பாகுபாடின்றி யாரை வேண்டுமானாலும் மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும்.
சாக்லேட் மூலம் அன்பு மற்றும் அரவணைபை காட்டுவதை தாண்டி, இதில் பல ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளது. எனவே இந்த சாக்லேட் தினத்தில், நமது ஆரோக்கியத்திற்கு சாக்லேட் என்ன வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
- டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
- கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது
- சிறிது சாக்லேட் சாப்பிடுவது , நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.
இந்த சாக்லேட் டே அன்று சாக்லேட்டுடன் உங்கள் நாள் முழுவதுமே இனிமையாக இருக்கட்டும்.



















