தமிழ்நாடு
சென்னையில் எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட கூடாது: காவல்துறை அறிவிப்பு!

ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சென்னையில் எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட கூடாது, எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பது குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் உள்ள விபரங்கள் பின்வருமாறு:
* அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்தக்கூடாது.
* ரிசார்ட்டுகள் பண்ணை வீடுகள் மாநாட்டு அரங்கில் ஆகியவற்றில் வர்த்தக ரீதியாக புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
* ஹோட்டல்களில், தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.
* சென்னையில் உள்ள காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை. மேலும் பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், நீலாங்கரை பீச், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடவும், டிசம்பர் 31 இரவு வாகனங்களை இயக்கவும் அனுமதி இல்லை.
இவ்வாறு புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















