வணிகம்
ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோவில் வேலை பார்க்கும் சென்னை இளைஞர்!

ஒரு நபர் ஒரு நிறுவனத்திற்கான வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்காக வேலை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேர்ந்த ஸ்வேதா சங்கர் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் சந்தித்த ஒரு இளைஞர் ஸ்விக்கி, டன்சோ மற்றும் ரேபிடோ ஆகிய மூன்று ஆன்லைன் நிறுவனங்களிலும் பணியாற்றுவதாக பதிவு செய்துள்ளார்.
ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணம் செய்வதற்காக புக் செய்து காத்திருந்தபோது இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ஸ்விக்கி சீருடை அணிந்திருந்தார் மற்றும் டன்சோவின் மளிகை பொருட்களையும் வைத்திருந்தார். அவருடைய பைக் டாக்ஸியில் நான் பயணம் செய்தபோது போகிற வழியிலேயே அவர் ஸ்விக்கி உணவு பொருளையும் டன்சோ மளிகை பொருட்களையும் சில இடங்களில் டெலிவரி செய்து அதன் பிறகு நான் சேர வேண்டிய இடத்திற்கும் என்னை கொண்டு போய் சேர்த்தார்.
அவருடைய செயலை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், ஒரே நேரத்தில் ஸ்விக்கி யூனிபார்ம் அணிந்து உணவு பொருளையும், டன்சோ மளிகை பையையும் டெலிவரி செய்துவிட்டு ரேபிடோவிலும் பணி செய்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை பார்ப்பதற்கு காரணம் ஊதியம் குறைவாக வருகிறது மட்டுமின்றி இந்த வேலைநீக்க நடவடிக்கை சீசனில் ஒரு வேலை போனாலும் மற்ற வேலை நம்மை காப்பாற்றும் என்ற எண்ணத்தில் என அந்த இளைஞர் கூறியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஐடி துறையில் மூன்லைட் என்ற வார்த்தை பரபரப்பானது என்பது தெரிந்தது. ஒரு நிறுவனத்தில் இருந்து கொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்திற்காக ஐடி துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றுவதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள இளைஞர் ஒருவர் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்த போது ’நான் ஐடியில் பணிந்து புரிந்து கொண்டே வார இறுதி நாட்களில் ரேபிடோவில் பணிபுரிந்து வருகிறேன் என்றும் பல்வேறு விதமான மக்களை சந்திப்பதற்காகவே நான் இதை செய்து வருகிறேன் என்றும் பதிவு செய்திருந்தார்.