Connect with us

வணிகம்

உஷார்.. இன்று முதல் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய மாற்றங்கள்!

Published

on

2021, ஆகஸ்ட் மாதம் இன்னும் 3 நாளில் முடிவடைய உள்ளது. செப்டம்பர் மாதம் ஆதார்- பாண் இனைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்பட பல்வேறு சேவைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.

இந்த மாற்றங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முன்கூட்டியே இதை படித்து கவனமாக இருங்கள் என bhoomitoday.com கேட்டுக்கொள்கிறது.

சமையல் எரிவாயு

கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டுக்குள் ரூபாய் 285 சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் கடந்த ஆண்டு சுமார் 600 ரூபாய் இருந்த சிலிண்டர் தற்போது நேற்றுவ் வரை ரூபாய் 875.50 என விற்பனையாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து ரூபாய் 900.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில மாதங்களில் ரூ.1000 என சிலிண்டர் விலை உயரும் அபாயம் உள்ளது.

ஆதார் – பிஎப் இணைப்பு

பிஎப் கணக்கின் UAN எண்ணில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் உங்கள் பிஎப் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியாது. இதை அமலுக்குக் கொண்டு வர அண்மையில் சமூக பாதுகாப்பு சட்டப்பிரிவு 142-ல் புதிய மாற்றத்தைச் செய்தது வருங்கால வைப்பு நிதி ஆணையம். ஓய்வுக் காலத்தில் பிஎப் நிதியைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி 2021 செப்டபம்ர் 30-ம் தேதிக்குள், தங்களது அனைத்து வாடிக்கையாளர்களும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை எனில் வாடிக்கையாளர் பெற்றுவந்த வங்கி சேவைகள் எதையும் இணைக்கும் வரை பயன்படுத்த முடியாது.

செக்

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்களின் படி 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு செக் விநியோகித்தால், அதை வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த செக் செல்லாமல் போய்விடும். மேலும் படிக்க..

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் வணிகர்களுக்கு, ஜிஎஸ்டிஆர் 1 தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் முதல் Rule-59(6) கட்டாயம் பின்பற்றப்படும். அதன்படி ஜிஎஸ்டிஆர் 3பி தாக்கல் செய்யாதவர்களால் ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தைத் தாக்கல் செய்ய முடியாது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?