கிரிக்கெட்
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்கள் மற்றும் மெய்டன்: பும்ரா ஆவேச பந்துவீச்சு!

இன்று நடைபெற்றுவரும் மும்பை – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தததுமட்டுமின்றி மெய்டன் ஓவராக பும்ரா வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வெங்கடேச அய்யர் நாற்பத்தி மூன்று ரன்களும், நிதிஷ் ரானா 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் .
ஆனால் அதே நேரத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இந்த போட்டியில் பும்ரா வீசிய 18-வது ஓவரில் 3 விக்கெட் விழுந்தது என்பதும் அது மட்டுமன்றி அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்க வில்லை என்பதால் மெய்டன் ஓவராக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 166 என்ற இலக்கை நோக்கி மும்பை இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் சென்னைக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.