இந்தியா
தூக்கவே 4 பேர் வேணுமே!.. 100 கிலோ எடையை அணிந்த மணப்பெண்… வைரல் வீடியோ….

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு.
அதேபோல், திருமணத்தில் மணமகனை விட மணமகள் அணியும் உடை கவனம் பெறுவதுண்டு. எனவே, அதற்காக மெனக்கெட்டு அவர்கள் ஆடையை தேர்ந்தெடுத்து அணிகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் அவரின் திருமணத்தில் 100 கிலோ எடை கொண்ட லஹாங்கா உடையை அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.