இந்தியா
தமிழகம் வர இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகம் வர இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜே.பி.நட்டா, “தனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.
அண்மையில் இவர் மேற்கு வங்கம் சென்ற போது அவர் மீது ஏற்படுத்திய தாக்குதலுக்கு, மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி, “விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று விரும்புவதாக” தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்றம் தேர்தல் வருவதை முன்னிட்டு, டிசம்பர் மாதம் இறுதியில் ஜே.பி.நட்டா தமிழகம் வர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












