உலகம்
இன்னும் ஆபத்தான கொரோனா வைரஸ்கள் உருவாகக்கூடும்: பில்கேட்ஸ் எச்சரிக்கை.

இன்னும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல வைரஸ்கள் உருவாகக் கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாடுகளில் ஐந்தாவது அலை பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் பல ஆபத்தான உருமாற்றம் பெற்றன வைரஸ்கள் உருவாகக் கூடும் என்றும் அதனால் உலகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார் .
கொரோனா முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இருப்பதாகவும் அதனால் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் மாறுபட்ட வகை கொரோனா பரவ 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.