டிவி
பிக்பாஸ் ப்ரோமோ போடும் விஜய் டிவி அதை எபிசோடுகளில் காண்பிக்காமல் போவது ஏன்?

பிக்பாஸ் சீசன் 4-ன், 4வது நாள், முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை பற்றிய ப்ரோமோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் அதை எபிசோடுகளில் காண்பிக்காமல் போகின்றனர். ப்ரோமோவை நம்பி எதிர்பார்ப்புடன், டிவியை ஆன் செய்து பார்த்தால் வேறு காட்சிகளைக் காண்பித்து அதிலேயே நேரத்தைக் கடத்தி விடுகின்றனர்.
கதை சொல்லும் விளையாட்டை ஒரு இரண்டு நாளுக்கு கொடுத்தால் சரி, அதையே மூன்றாவது நாளும் தொடருவது, ப்ரோமோ பார்க்கும் போதே ஏதோ அலுப்பாக உள்ளது.
சரி ப்ரோமோ பற்றி பேசுவோம். இன்றைய ப்ரோமோவில் கதை சொல்லும் அனிதா சம்பத், எனக்கு முகவரியே கிடையாது. நான் கஷ்டப்பட்டு பெயரைச் சம்பாதித்து இருக்கிறேன். அதை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
நமக்கு என்று ஒரு சொந்த வீடு இருந்தால் கூட நன்றாக இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அட்ரஸ் கூட தெரியாது. யார் கூடவும் கம்பேர் செய்யாதீங்க. என் வீட்டில் நான் தான் பெற்றோர் போல. எனக்கு எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கும் எண்ணம் இல்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையைக் கடந்து வந்து இருக்கிறேன், என்று அனிதா சம்பத் கதை செல்வதையும், விட்டில் உள்ளவர்களுடன் பேசுவதையும் ப்ரோமாக வெளியிட்டுள்ளனர்.
ஆனால் ப்ரோமோ அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டுங்கள். முதல் வாரமே சலிப்பு தட்ட தொடங்கிவிட்டது.