டிவி
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் ரச்சிதாவின் சம்பளம் இவ்வளவா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரச்சிதாவின் சம்பளம் எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது.
21 போட்டியாளர்களுடன் நடைபெற்று வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, முதல் இரண்டு வாரங்கள் போட்டியாளர்களுக்கு மிகவும் டஃப் கொடுத்த ஜிபி முத்து தன் மகன் மீது வைத்திருந்த பாசம் காரணமாக வெளியேறினார்.
தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெர்லினா, மகேஷ்வரி, நிவாசினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்ட உள்ளிட்டவர்கள் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்கள்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடக்கத்தின் மீது மிகவும் கடுமையான போட்டியாளர் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சிதா குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறுகிறார்.
சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரச்சித்தாவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளுக்கு 28,000 ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரச்சித்தா பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 90 நாட்கள் வரை இருந்துள்ளார். மொத்தமாக 25 லட்சம் ரூபாய் வரை ரச்சித்தா சம்பளமாகப் பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.