சினிமா செய்திகள்
ஆர்யாவின் ‘சார்பாட்டா பரம்பரை’: அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!

மெட்ராஸ், கபாலி, காலா உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடுத்த படம் ‘சார்பாட்டா பரம்பரை’. ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஓடிடியில் வரும் 22ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில் கிட்டத்தட்ட முழு கதையை யூகிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன.
பாக்சிங் காரணமாக இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை ஓயாமல் இருப்பதும் அதன் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது தெரியவருகிறது. ஆர்யா, பாக்சர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். ஆர்யா பாக்ஸர் கேரக்டருக்காக அவர் பல மாதங்கள் மெனக்கெட்டு உடலை வருத்தி தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பும் பாடி லேங்குவேஜும் கச்சிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் தங்களுக்கு கொடுத்த வேடங்களை கச்சிதமாக நடித்துள்ளனர். நாயகி துஷாரா ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்பது டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.
சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான பின்னணி இசை, முரளியின் அபூர்வமான கேமரா கோணங்கள், பா ரஞ்சித்தின் அட்டகாசமான இயக்கம் ஆகியவை இணைந்து படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.