சினிமா
கேஜிஎப்3 : ரசிகர்களுக்கு படக்குழு சொன்ன சூப்பர் அப்டேட்!

கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து, ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்டமான திரைப்படம் தான் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படம் இந்திய அளவில் வசூலைக் குவித்தது.
கேஜிஎப்2 ஓராண்டு நிறைவு
கேஜிஎப் 2 ஆம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், 1978 – 81 ஆம் ஆண்டுகள் வரை ராக்கி பாய் எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. ஆகையால், கேஜிஎப் 3 பட கதை 1978 – 81 காலக் கட்டங்களில் நடக்கும் திரைப்படமாக உருவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கேஜிஎப்3
இதனையடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பானது வெகு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். தற்போது கேஜிஎப் 3 ஆம் பாகத்திற்கான திரைக்கதைப் பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார்.
தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இத்திரைப்பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.