தமிழ்நாடு
உயிருக்குப் பயப்படுபவர்கள் போருக்கு வரக்கூடாது- நடிகை கஸ்தூரி காட்டம்

‘உயிருக்குப் பயப்படுபவர்கள் போருக்கு வரக்கூடாது’ என நடிகை கஸ்தூரி நடிகர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இன்று தனது உடல் நிலையைக் காரணமாகக் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்திதான் வைரலாகிக் கொண்டு இருந்தது. அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இரு தினங்களுக்கு முன்னர் தான் சென்னை வீடு திரும்பினார். இன்று தனது அரசியல் பயணத்தை நிறைவு செய்வதாகவும் அறிவித்துவிட்டார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி, “உயிருக்குப் பயப்படுபவர்கள் போருக்கு வரக்கூடாது. எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.— Kasturi Shankar (@KasthuriShankar) December 29, 2020



















