சினிமா
சிலம்பாட்டம் ஆடும் நடிகை சாய் தன்ஷிகா வைரலாகும் வீடியோ!
சாய் தன்ஷிகா பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பைத் தவிரத் தற்காப்புக் கலைகளும் கற்று வருகிறார். தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைச் சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார்.
நேற்று நடந்த நடன இயக்குநர் வாண்டியின் டான்ஸ் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டுத் தொடக்க விழாவில் கலந்துகொண்டார் சாய் தன்ஷிகா. அப்போது கையில் சிலம்பத்தை எடுத்த சாய் தன்ஷிகா அதை அட்டகாவமாகச் சுழற்றினார்.
தன்ஷிகா சிலம்பம் சுற்றுகிற அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
















