இந்தியா
பெண் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம்: எல்லைப்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

வங்கதேசத்தை ஒட்டிய எல்லை பகுதியான நடையா மாவட்டம் துங்கி எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

#image_title
இந்த பாலியல் பலாத்கார சம்பவமானது எல்லைப்பாதுகாப்பு படை முகாமில் நேற்று முன் தினம் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் எல்லைப்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு, துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக என்ன சொல்ல போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
























