இந்தியா
40 பெண்களிடம் அத்துமீறல்.. நிர்வாண வீடியோ அனுப்பி தொல்லை.. பிளிப்கார்ட் டெலிவரி பாய் கைது..!

சுமார் 40 பெண்களிடம் அத்துமீறியதாகவும் இளம் பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை செய்ததாகவும் 27 வயது பிளிப்கார்ட் டெலிவரி பாய் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புவேவை சேர்ந்த 27 வயது மன்சூலே என்பவர் சுமார் 40 பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை செய்து வரும் நிலையில் அவர் சுமார் 40 பெண்களுக்கு நிர்வாண வீடியோ அழைப்பை கொடுத்து தொல்லை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரியின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
வாட்ஸ் அப் மூலம் பெண்களை அழைத்து நிர்வாணமாக பேசுவதாகவும் அதனால் பல பெண்கள் அவருடைய அழைப்பை துண்டித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் வேலை தேடும் இணையதள சமூக குழுக்களை மன்சூலே கண்டுபிடிப்பார் என்றும் அதில் அவர் வேலை தேடும் நபர் போல குழுக்களில் இணைந்து அந்த குழுக்களில் உள்ள பெண்களை மட்டும் தேர்வு செய்வார் என்றும் பிறகு அவர்களுடன் சாதாரணமாக பேசி பின்னர் திடீரென ஆபாச வீடியோ அழைப்புகளை செய்வார் என்றும் முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
ஆபாச வீடியோ அனுப்பி மயக்கும் பெண்களிடம் அத்துமீறுவார் என்றும் ஆபாச வீடியோ வீடியோவை கட் செய்யும் பெண்களை மிரட்டுவார் என்றும் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் ஆபாச வீடியோ அழைப்புகள் செய்ததாகவும் ஆனால் ஒரே ஒரு பெண் மட்டுமே தைரியமாக காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் குற்றவாளியின் மொபைல் ஃபோனை கைப்பற்றி மேலும் சில ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவயதிலேயே பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய மன்சூலே பெற்றோர் இறந்த பிறகு தனது சகோதரருடன் புனேவில் வாழ்ந்து வருகிறார் என்றும் பகுதி நேரமாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை செய்யும் மன்சூலே முழு நேர தொழிலாக பெண்களை மிரட்டுவதிலும் ஆபாச வீடியோ அனுப்புவதிலும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















