தமிழ்நாடு
நடப்பு காலாண்டில் ரூ.51,000 கோடி கடன் வாங்கும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-2022 நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 1,01,047 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதுவே 2022-2023 நிதியாண்டில் 1,29,600.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வாங்க உள்ள இந்த கடன் மாநில வளர்ச்சிக்கான கடன் பத்திரம் மூலம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















