சினிமா செய்திகள்
இதை செய்திருந்தால் ஒரு உயிர் போயிருக்காது: சன் டிவி விஜய் பேட்டி!

இந்த ஒரு விஷயத்தில் கவனமாக செய்திருந்தால் ஒரு சிறுவனின் உயிர் போயிருக்காது என சன் டிவியில் விஜய் அளித்த பேட்டியில் விஜய் கூறியுள்ளார்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு குண்டு அருகில் உள்ள வீட்டின் மீது பாய்ந்தது. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்ததால் அந்த சிறுவன் மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து இரண்டு பயிற்சி மையம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான நெல்சன் எடுத்த பேட்டியில் கூறிய விஜய், ‘ ஒரு துப்பாக்கி சூடு பயிற்சி மையம் அமைப்பதற்கு முன்னர் அது குறித்து ஆய்வு செய்து அமைக்க வேண்டும்.
பொதுவாக துப்பாக்கி பயிற்சி நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தான் அமைக்கவேண்டும். துப்பாக்கி சுடும் போது அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும், எவ்வளவு தூரம் சிறு குண்டுகள் செல்லும், அங்கு குடியிருப்பு வீடுகள் இருக்கிறதா? என்பதை யோசித்து பயிற்சி மையம் வேண்டும் .
இவ்வாறு பயிற்சி தளத்தையும் அமைத்திருந்தால் ஒரு அப்பாவி சிறுவனின் உயிர் நிச்சயம் போய் இருக்காது என்று வருத்தத்துடன் கூறினார். அவரது சமூக பார்வை அனைவரையும் கவர்ந்துள்ளது.






















