தமிழ்நாடு
6 ஆண்டுகளுக்கு பின் சென்னை மேயர் தாக்கல் செய்யும் பட்ஜெட்: பெரும் எதிர்பார்ப்பு!

உள்ளாட்சி தேர்தல் நடை பெறாத காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தனி அதிகாரி தாக்கல் செய்த நிலையில் தற்போது சென்னை மேயர் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
சமீபத்தில் சென்னை மேயராக பொறுப்பேற்ற ஆர்.பிரியா ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் சென்னை மேயர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இந்த பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















