தமிழ்நாடு
நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும்: பிக்பாஸ் தமிழ் நடிகை டுவிட்!

நடிகர் சித்தார்த் கைது செய்யப்பட்டால் அவரை போன்ற நபர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சித்தார்த் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. திமுக ஆட்சி வருவதற்கு முன்னர் அதிமுக அரசையும் விமர்சனம் செய்து வந்த சித்தார்த் தற்போது திமுக ஆட்சியை விமர்சனம் செய்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்து நடிகையும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
பெண்களை வாய்மொழியாக அவமானப்படுத்துவது பற்றிய மற்றொரு ட்வீட். இது ஏற்கத்தக்கது அல்ல. திமுக ஆதரவாளராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னீர்கள். மேலும் நீங்கள் அண்ணா மீது சத்தியம் செய்தீர்கள். அவர் கைது செய்யப்பட இது அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும். இந்த டுவிட்டை அவர் முதல்வருக்கும் தமிழ்நாடு போலீஸுக்கும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய சாய்னா நேவால் டுவிட் ஒன்றுக்கும் சித்தார்த் சர்ச்சைக்குரிய ஒரு டுவிட் பதிவு செய்திருந்தார் என்பதும் அப்போதும் காயத்ரி ரகுராம் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களை வாய்மொழியாக அவமானப்படுத்துவது பற்றிய மற்றொரு ட்வீட். இது ஏற்கத்தக்கது அல்ல. திமுக ஆதரவாளராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னீர்கள். மேலும் நீங்கள் அண்ணா மீது சத்தியம் செய்தீர்கள். அவர் கைது செய்யப்பட இது அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.@tnpoliceoffl @mkstalin pic.twitter.com/vBJXNsgAvt
— Gayathri Raguramm ???????????? (@Gayatri_Raguram) January 10, 2022

















