சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் தகுதியே இல்லை: நிரூப் கூறுவது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ராஜூ தகுதியே இல்லை என்றும் அவருக்கு பதிலாக அபிஷேக் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் நிரூப் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை விரைவில் எட்டவுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று கூறும் நபர் என்று ராஜூவை நிரூப் கூறுகிறார். ஏனெனில் அவர் நன்றாக காமெடி செய்கிறார், ஜோக் சொல்கிறார் என்றாலும், இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவரிடத்தில் இருந்ததே இல்லை, அதை நான் பார்த்ததே இல்லை என்று நிரூப் கூறுகிறார்.
மேலும் ராஜூவுக்கு பதிலாக இந்த வீட்டில் அபிஷேக் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவரது தந்திரம் மற்றும் விளையாடும் திறன் நன்றாக இருந்தது என்றும் அவரை ஒரு வலிமையான போட்டியாளராக நான் பார்த்தேன் என்று நிரூப் கூறுவதை கேட்டு ராஜூ மட்டுமல்ல கமல்ஹாசனும் சற்று அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டு இருந்தார் என்பது இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் தெரியவந்தது.
ஒவ்வொரு முறை நாமினேஷன் செய்யப்படும் போதும் ராஜு தான் முதலில் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்பதும் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த வாரம் கூட முதலில் காப்பாற்றப்பட்டது ராஜூ தான் என்ற நிலையில் நிரூப் இவ்வாறு கூறியிருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/oEHQzNZpaH
— Vijay Television (@vijaytelevision) January 2, 2022








