சினிமா செய்திகள்
பிறந்த நாளில் தனது காதலரை அறிவித்த நடிகை ரகுல் ப்ரித்திசிங்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்தி சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அவர் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு யுவன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத்தி சிங் அதன் பின்னர் தடையர தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில திரைப் படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் இன்று தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார். பிரபல நடிகர் தயாரிப்பாளர் நடன இயக்குனர் ஜாக்கி பாக்நானி என்பவர்தான் தனது காதலர் என்று ராகுல் ப்ரீத்தி சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகை ராகுல் பிரித் சிங் தனது பிறந்தநாளின் போது அவரது காதலை அறிமுகப்படுத்தியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
















