தமிழ்நாடு
ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்ற மகிழ்ச்சி.. இலவசமாக தலா 2 கிலோ தக்காளி வழங்கி அசத்திய வியாபாரி!

டோக்கியோவில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் பொட்டியில், ஈட்டி எறிதலில் சனிக்கிழமை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை நாடே கொண்டாடி வரும் நிலையில், வந்தவாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் தலா 2 கிலோ தக்களி வழங்கி அசத்தியுள்ளார்.
ஒலிபிக்கில் இந்தியா தங்கம் வென்றதைக் கொண்டாடா முடிவு செய்த வந்தவாசியை சேர்ந்த காய்கறி வியாபாரி, சேட்டான் இன்று முழுவதும் இவரது கடைக்கு வந்து காய்கறி வாங்கிய மக்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளியை வழங்கியுள்ளார்.
40 ஆயிரம் மதிப்பிலான தக்காளியை இந்த வியாபாரி இன்று ஒரு நாளில் மட்டும் இலவசமாக வழங்கியுள்ளார்.
தக்காளி கிலோ விலை 10 ரூபாய்க்கு இன்று சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















