சினிமா செய்திகள்
’தளபதி 67’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு பிரமுகரா? அதிர்ச்சியில் தமிழ் தயாரிப்பாளர்கள்?

தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவது தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட மற்ற மொழிகளிலும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் நேரடி முதல் தெலுங்கு திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்யின் 67வது படத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களை தயாரித்த அல்லு அரவிந்து என்பவர் தான் விஜய்யின் 67 வது படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்து வருவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இனிமேலாவது விஜய், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.








