சினிமா செய்திகள்
படுக்கைக்கு அழைத்த விவகாரம்: அனிதா சம்பத் வெளியிட்ட ஆதாரம்!

விஜய் டிவியில் சான்ஸ் கிடைக்க வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டுமென மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மெசேஜை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் அனிதா சம்பத் சமீபத்தில் மர்ம நபரின் முகத்திரையை கிழித்து உள்ளார்.
அனிதாவின் தோழி ஒருவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் அதற்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றும் மர்ம நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அனிதாவின் தோழி அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதாவுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த ஸ்க்ரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனிதா, ‘இதுபோன்று மோசடி பேர்வழிகளை யாரும் நம்பாதீர்கள்’ என அந்த மர்ம நபரின் முகத்திரையை கிழித்து உள்ளார்.இதனை அடுத்து அனிதா சம்பத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


















