தமிழ்நாடு
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மார்க்கிஸ்ட்? கேட்டதில் பாதி தருவதாக தகவல்!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் திமுக கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் வரை கேட்டதாகவும் ஆனால் திமுக தரப்பில் இருந்து 5 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாகவும் தாங்கள் கேட்ட தொகுதியின் எண்ணிக்கைக்கு பாதிக்கும் குறைவான தொகுதிகளே திமுக தரப்பில் ஒதுக்குவதாக தெரிவித்ததால் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் அடுத்த கட்ட நிலைமை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் தக்க முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து மார்க்கிஸ்ட் வெளியேறினால், கமல் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


















