தமிழ்நாடு
முக ஸ்டாலினுக்கு எதிராக ஓபிஎஸ் மகன் போட்டியா?

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்டாலினை எதிர்த்து ஏற்கனவே சில பிரபலங்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவில் அண்ணாமலை உள்ளிட்ட ஒருசிலர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுகவுக்கு கொளத்தூர் தொகுதி கிடைத்தால் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் மகன் கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என நேற்று அதிமுகவினர் சுமார் 25 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் இளையமகன் பிரதீப் உசிலம்பட்டி தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதி எம்பி ஆக இருக்கும் நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டுமென்று என்பதே பிரதீப்பின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.



















