சினிமா செய்திகள்
ஐந்து வயதில் இருந்தே எனக்கு ‘அந்த’ பிரச்சனை: காஜல் அகர்வால்
ஐந்து வயதிலிருந்தே தனக்கு அந்த பிரச்சனை இருப்பதாக பிரபல நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தமிழ் தெலுங்கு உள்பட பாலிவுட்டிலும் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால், தற்போது கமல்ஹாசன் ’இந்தியன் 2’ சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஐந்து வயது முதலே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’ஐந்து வயதாக நான் இருந்தபோது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து அப்போது முதலே நான் உணவு கட்டுப்பாடுடன் இருந்து வருகிறேன். வளர்ந்த பிறகும் எனக்கு ஆஸ்துமா பிரச்சனை தொடர்ந்து வந்தது. குளிர்காலம் வரும் போதெல்லாம் ஆஸ்துமா அதிகமானது, அதுமட்டுமின்றி தூசு புகை எதிர்கொள்ளும்போது இந்த பிரச்சனை எனக்கு தீவிரமாக இருக்கும்.
இதிலிருந்து நான் விடுபட இன்ஹேலரை பயன்படுத்தத் தொடங்கினேன். உடனே எனக்கு நல்ல வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்த்மா பாதிப்பு உள்ளது. ஆனால் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்தத் தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்கி ஆஸ்துமாவிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் என்று அவர் ஒரு விழிப்புணர்வு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை சுமார் 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பதும், இந்த பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது






















