சினிமா செய்திகள்
மேக்அப்-க்காக தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும் நயன்தாரா, ஆண்ட்ரியா- புலம்பும் தயாரிப்பாளர்

நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளுக்கான மேக்அப் செலவுகள் தயாரிப்பாளர்களைக் கூடுதலாக நஷ்டப்படுத்துவதாக நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் படம் ஒன்றிந் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் எல்லாம் மேக் அப் போட்டுக்கொள்ள மும்பையில் இருந்து தான் மேக்அப் நிபுணர்கள் வர வைக்கப்பட வேண்டும் என அழுத்தமாக இருக்கிறார்கள்.

இதனால் அந்த செலவையும் தயாரிப்பாளரே ஏற்க வேண்டியதாக உள்ளது. மேக்அப் மட்டுமில்லை அந்த மேக்அப் நிபுணர்கள் வந்து போகும் செலவு, தங்கும் செலவு, உணவு என அவர்களுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் ஒரு தயாரிப்பாளருக்கு செலவாகும். இதில் நடிகைகளுக்கான செலவு தனி. இதேபோலத் தான் சில நடிகர்களும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தருவார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியங்களையும் ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.









