தமிழ்நாடு
சென்னை ஸ்டார் ஹோட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா!

சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி.,யில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். இந்த நிலையில், கிண்டியில் உள்ள பிரபல நட்சத்தி ஹோட்டல் ஊழியர்களுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் நட்சத்திர ஹோட்டலில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் நட்சத்திர ஹோட்டலில் அடுத்தடுத்து நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் 10 ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்ற ஹோட்டல்களிலும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி அந்தந்த ஹோட்டல்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்குகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.












