சினிமா செய்திகள்
இணைகிறார்களா திரை ஜாம்பவான்கள் சங்கர், ரஹ்மான், விக்ரம் மகன்கள்..!- வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இயக்குநர் சங்கர், நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் மகன்களும் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
புதிய திரைப்படம் ஒன்றுக்காக மூன்று ஜாம்பவான்களின் மகன்களும் இணைகிறார்களா என்னும் கேள்வி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் சங்கரின் மகன் அர்ஜித் சங்கர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மற்றும் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகன் அமீன் ஆகிய மூவரும் இணைந்து அமந்துள்ள புகைப்படம்தான் தற்போது சினி ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



















