Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (2020, நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எதைப் பறறியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும் எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் மேஷ ராசியினரே, இந்த வாரம் சுப பலன் உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.

தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

உலக அனுபவ ஞானம் உடைய ரிஷப ராசியினரே, நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த வாரம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள்  விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

எந்த ஒரு காரியத்தையும் விடா முயற்சியுடன் செய்யும் மிதுன ராசியினரே, இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலிடம் உங்களுக்கான பொறுப்புகளை அதிகரிக்கும்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

வாக்கு திறமையும் எளிதில் கோபம் அடையாத குணமும் கொண்ட கடக ராசியினரே, இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். மனதை கவலை கொள்ளச் செய்த  பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மேலிடம் அனுசரணையாக இருக்கும்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: திங்கள் கிழமையில் அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத  சிம்ம ராசியினரே, நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த வாரம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

சாந்தமும், அமைதியும் உடைய கன்னி ராசியினரே, நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மையை தராவிட்டாலும்  உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

மாணவர்கள் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதிகாரம் செலுத்தும் ஆர்வமும் கொண்ட துலா ராசியினரே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: கன்னி பெண்கள் 9 பேருக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் கொடுத்து உபசரிக்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

பார்க்க சாது போல் இருந்தாலும் திடீர் உத்வேகத்துடன்  எதிலும் வேகம் காட்டும் விருச்சிக ராசியினரே, இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனையையும் கேட்கும் தனுசு ராசியினரே, இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் நண்பர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும்.

பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

சொல்லாற்றலும் செயலாற்றலும் பெற்ற மகர ராசியினரே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச் சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் உடைய கும்ப ராசியினரே, இந்த வாரம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது  எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்

பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடும் மீன ராசியினரே, நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

கஷ்டமில்லாத  சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்4 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. güncel bilgi paylaşım bloğu.