Connect with us

தமிழ்நாடு

மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும்: எச்.ராஜா ஆவேசம்!

Published

on

மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளி கல்வித்துறையின் அறிவுப்புக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்தப் பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும்கூட ஊக்குவிப்பதாகத் தெரியவருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு திமுக எம்பி கனிமொழி வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகளைக் கட்டக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது என்பது தனிநபர் உரிமைக்கும், இந்து மத உணர்வுக்கும் எதிரானது. நெற்றியில் திலகமிடுவதும் கையில் கயிறு கட்டுவதும் இந்துக்களின் பழக்க வழக்கம். இதில் சாதி எங்கிருந்து வந்தது. இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால் மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையின் அந்த அறிக்கை, எங்களின் கவனத்துக்கு வரவில்லை என்றும் தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே என்னென்ன நடைமுறைகள் இருக்கிறதோ அதனை பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை எனவும் எச்.ராஜாவுக்கு சாதகமாக பேசினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.05.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா12 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா12 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்23 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Start investing dicas para investimento. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.