சினிமா செய்திகள்
7 கோடி சம்பளம் வாங்கிய ஷ்ரத்தா கபூர்!

சாஹோ படத்திற்காக 7 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார் நடிகை ஷ்ரத்தா.
300 கோடி எனும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள சாஹோ திரைப்படம். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து இந்த மாதம் 30ம் தேதி ரீலிசுக்கு தயாராகியுள்ளது.
முன்னணி நடிகைகளான நயந்தரா, அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் தான் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள். பெரும்பாலும் 3ல் இருந்து 4 கோடி தான் அவர்களது சம்பளம்.
ஆனால் இந்தி படங்களில் 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா கபூர், சாஹோ படத்திற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பத்மாவத் படத்திற்காக பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதே இதுவரை அதிகமான ஒன்றாக உள்ளது.














